Monday, December 08, 2008

480. இந்தியா மீது பாக். அணுகுண்டு வீசுமா?

இந்தியா மீது அணு குண்டு வீசப்பட்டால் பின்வரும் சம்பவங்கள் தொடரும்.

1. மன்மோகன் டி வி யில் தோன்றி தான் இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்தியாவின் பக்கத்து நாடுகளின் ஒன்றே இந்த அணுகுண்டை வீசியிருப்பதாக நான் 'தீவிரமாக' சந்தேகப்படுவதாகவும் இதற்கு இந்திய அரசு தக்கவிதத்தில், கலந்து ஆலோசித்துப் பதில் சொல்லும் என்றும் கூறுவார்

2. காண்டலிசா ரைஸுக்கு பதிலாக ஹிலரி இந்தியா பிரயாணப்பட்டு "இந்தியா பொறுமை காக்க வேண்டும் ஒரே ஒரு நகரத்தில் தானே அணுகுண்டு போட்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன இந்தியா முழுக்கவா போட்டார்கள் நான் அவர்களிடம் சொல்லி இனிமேல் ஒழுங்காக இருக்கச் சொல்கிறேன் நீங்கள் அமைதி காக்க வேண்டும் இல்லாவிட்டால் தாலிபான் எங்களை ஆப்கானிஸ்தானுக்குள் மாறி மாறி அடிப்பார்கள், 'நாம்' ஒன்று சேர்ந்து war against terror ல் வெல்வோம்!" என்று சொல்லி விட்டுப் போவார். அவரைத் தொடர்ந்து பிற குஞ்சுக் குழுவான்கள் வந்து அதே வார்த்தைகளை பல விதமாக பிரயோகித்து விட்டுப் போவார்கள்

3. பாக்கிஸ்தான் பிரதமர் 'இந்த அணுகுண்டு பாக்கிஸ்தானில் இருந்து வீசப் பட்டிருக்கலாம். இருந்தாலும் அதற்கும் பாக்கிஸ்தான் அரசுக்கும் சம்பந்தமில்லை(!) அப்படி வீசினோம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அப்படி ஆதாரம் கொடுத்தால் நாங்கள் கண்டு பிடித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால் யார் மீது எடுப்பது என்பதில் சின்னக் குழப்பம் உள்ளது. மேலும், ஐ.எஸ்.ஐ ஒரு non-state actor!! அணுகுண்டு வீசியதை நாங்கள் கண்டிக்கிறோம் அதே நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியும் அடைகிறோம்' என்பார்

4. உலகம் முழுக்க மீடியாக்கள் 'பாக்கிஸ்தான் தான் அணுகுண்டு போட்டதற்கு என்ன ஆதாரம் என்பதை இன்னும் இந்தியா அளிக்கவில்லை' என்பார்கள்

5. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் 'அணுகுண்டு போட்டது பாக்கிஸ்தான் தான் என்று தடாலடியாகச் சொல்லக் கூடாது. 'புலன் விசாரணை' செய்து கண்டு பிடிக்க வேண்டும், அதற்கு சீனாவிடம் ஒத்துழைப்புக் கேளுங்கள், அமெரிக்காவின் அடிவருடியதால் தான் இந்த நிலைமை வந்தது' என்று சொல்வார்கள்.

6. இந்து பத்திரிகை, அந்தோணி மார்க்ஸ் ஆகியோர் 'இதை 'கடுமையாக' கண்டிக்கும் அதே வேளையில் ஏன் போட்டார்கள் என்பதற்கான நியாயமான காரணத்தை நாம் ஆராயந்து அவர்களுக்குள்ள மனக்குறையைக் களைய வேண்டும்' என்பார்கள். இ.பா 'காஷ்மீரைக் கொடுத்திருந்தால் இப்படி அணுகுண்டு போட்டிருப்பார்களா? என் வீட்டுக்கு முன்னாடி கூடத்தான் தீபாவளி அன்று சிறுவர்கள் அணுகுண்டு போட்டார்கள் அதற்கெல்லாம் நான் வருத்தமா பட்டேன். அணுகுண்டு போட்டவர்களுக்கு ஆண்மை இருக்கிறதா இல்லை அந்தக் குறையைப் போக்கப் போட்டார்களா என்பதை நாம் பாரபட்சம் இன்றி ஆய்வு செய்ய வேண்டும்' என்பார்!

7. நமது போலி செக்யூலரிஸ்ட்கள், அச்ச உணர்வின் காரணமாக அவர்கள் அணுகுண்டு போட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்களது ஏழ்மையே காரணம். அச்ச உணர்வையும் தரித்தரத்தையும் நீக்க வழிவகை செய்தல் வேண்டும் என்பார்கள். போ.செக்யூலரிஸ்ட்களை, தேசியத்தில் மிக்க நம்பிக்கை உள்ளவர்கள் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். நடுநிலைவாதிகள் தேசியவாதிகளுக்கு 'இவ்வளவு சினம் ஆகாது' என்று அறிவுறுத்துவார்கள் !

8. பிஜேபி POTA இல்லாததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது, அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஆவேசப்படும்

9. 'குடும்ப ஆரோக்கியத்தை ஈஸியா எடுத்துக்கலாமா? அதனால் தான் நான் அதில் முழுகவனம் செலுத்துகிறேன்' என்றவாறு கருணாநிதி தன் பணியில் மூழ்கியிருப்பார். ஜெயலலிதா 'கருணாநிதியின் மைனாரிட்டி அரசு தான் இந்த நிலைமைக்கு காரணம். அதனால், அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். திமுக ஆட்சியை விட்டு விலகுவது அதை விட உசிதம்!' என்று தனது 788-வது கோப அறிக்கையை விடுவார்!

10. நமது இந்திய நியூஸ் மீடியா சேனல்கள், குண்டு வெடித்ததையும், மக்கள் கும்பல் கும்பலாக செத்துப் போனதையும் மிக அருகில் இருந்து படம் பிடித்து, அக்காட்சிகளை விடாமல் 24/7 ஒளிபரப்புவார்கள்! "Breaking News-ல் நாங்கள் தான் நம்பர் ஒன். இவ்வளவு அருகில் சென்று படம் பிடித்து உங்களுக்கு exclusive காட்சிகளையும் செய்திகளையும் தருவது நாங்கள் மட்டுமே! கடந்த நான்கு நாட்களில் எங்கள் கவரேஜை 50 லட்சம் பேர் பார்த்திருக்கிறீர்கள், உங்களுக்கு நன்றி" என்று எப்போதும் போல போட்டி போட்டுக் கொண்டு விளம்பரத்துக்கு அலைவார்கள்!

எ.அ.பாலா

பி.கு: மக்களே, மேற்கூறியது போல உங்களுக்கு ஏதாவது ஐடியா தோன்றினால், பின்னூட்டத்தில் சொல்லவும் !

13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

இலவசக்கொத்தனார் said...

நீங்க அடுத்த தலைமுறை குண்டு போட்டா என்ன ஆகும் அப்படின்னு பதிவு போடுவீங்க.

மறந்து போய் இட்லி வடையில் போட வேண்டிய சாயத் தீற்றலை இங்க போட்டுட்டீங்களான்னு நான் பின்னூட்டுவேன்.

Life as usual! :(

எட்வின் said...

நமது அய்யா ராமதாஸ் அவர்கள் இவை அனைத்திற்கும் சிங்கள அரசும் தமிழக தி.மு.க அரசும் தான் காரணம் என்று ஒரு போடு போட்டாலும் போடுவார்.

said...

பாக்கிஸ்தான் எதற்காக குண்டு வீசவேண்டும்? அடிமைகளை யாராவது ஒட்டுமொத்தமாக அழிப்பார்களா? தாங்கள் சொல்லுவதை ஏற்றுக்கொள்வதற்காக சாட்டையால் அடிப்பதே போதுமானது. இஸ்லாமியர்களுக்கு அது தெரியும். அவர்கள் அவ்வபோது வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கியால் சுடுவது போன்ற சாட்டையடிகளை இந்த இந்து திம்மிக்களுக்குக் கொடுத்து அவர்களை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்கிறார்கள்.

அ. மார்க்ஸ், ஞானி, பாமரன், மனுஷ்யபுத்திரன் என்ற மதராஸா புத்திரன், சிறிய பெரிய இதழ்களின் ஆசிரியர்கள், தொலைக்காட்சி சேனல்களின் உரிமையாளர்கள் போன்றவர்கள் சாட்டையடி தேவையில்லாமலேயே எஜமானர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை மகிழ்விப்பவர்கள்.

அவர்களுக்கு ரொட்டித்துண்டுகளை எறியும் கருணைமிக்க இஸ்லாமியர்கள், இன்னமும் திம்மித்தனத்தை ஏற்றுக்கொள்ளாத இந்துக்களுக்கு சாட்டையடிகளை வழங்குகிறது.

அடிமைகளை அழிக்கக்கூடாது. அடிக்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

மும்பையில் தாக்குதல் நடந்தபோது இரவுநேரத்திலும் தீவிரவாதிகளாக்கப்பட்ட அப்பாவிகளைக் கருணையின்றி வேட்டையாடியது கமாண்டோ கொலைவெறிக்குழு. அதனால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஆக்கப்பட்டவர்களின் வேறுவழியற்ற எதிர்வினையே இந்த அணுகுண்டு வீசல். வன்முறையை எந்தக்காரணம் முன்னிட்டும் ஒப்புக்கொள்ள மாட்டோம் - அதே நேரத்தில் அணுகுண்டு ஏன் வீசினார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் (ஒரு வலைப்பதிவில் இருந்து எடுத்தது);

அணுகுண்டு வீசியதையே திரும்பத்திரும்பக் காட்டிக்கொண்டிருந்தனர் ஆங்கிலத் தொலைக்காட்சிகள்; இந்தப் பிரச்சினையின் நடுவே வேலைக்குச் செல்ல முடியாமல் லாஸ் ஆப் பேயில் 200 ரூபாய் இழந்த ஏழைத் தொழிலாளியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஏழைகளுக்கு ஊடகத்தில் அவ்வளவுதான் மதிப்பு. இந்த ஏற்றத்தாழ்வை யாருமே கேட்கவில்லை - நான் தான் கேட்கிறேன். (ஊ பக்கங்கள்)

said...

பாலா,

வலதுசாரிகளின் போர் வெறி ஆயாசம் தருகிறது.

மும்பை தாக்குதல் கீழ்த்தரமான ஒரு தீவிரவாத நடவடிக்கை என்பதில் வேறு கருத்தில்லை.. அது பாக்கிஸ்தானில் இருந்து தான் திட்டமிடப்பட்டது என்பதும் இப்போது சந்தேகமில்லாமல் வெளியாகிவிட்டது..

சரி இப்போ என்ன செய்யலாம்?

படையெடுத்துப் போய் போட்டு சாத்தி விடலாமா?

முடியாதுங்க.. பின் லேடன் அங்கே தான் இருக்கான்னு தெரிஞ்சும் ஆனானப்பட்ட அமெரிக்காவே பொத்திட்டு தான் இருக்கான்.

முதலில் பாக்கிஸ்தான் என்னும் நாடு நமது நாட்டைவிட பல வகைகளில் வித்தியாசமான நாடு என்பதை உணருங்கள். அங்கே செண்ட்ரலைஸ்டு கன்ட்ரோல் இல்லை. பல பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. நாம் நம்புவது போல் ஐ.எஸ்.ஐ எல்லா முஜாகிதின் குழுக்களின் மேலும் வரைமுறையற்ற கட்டுப்பாடு செலுத்தவில்லை ( இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மை ) மேலும் ஐ.எஸ்.ஐ கூட அரசின் கட்டுப்பாட்டில் இல்லை Their actions are not at all accountable. அங்கே அரசுக்கும் அரசாங்கத்துக்கும் மிகத் தீவிரமான முரன்பாடு இருக்கிறது. அரசின் ஒரு பிரிவு லிபரலாகவும் ஒரு பிரிவு தீவிர வலதுசாரியாகவும் செயல்படுகிறது.

இந்நிலையில் பாக்கிஸ்தானின் மேல் போர் தொடுத்தால் (நாம் வெல்லும் பட்சத்தில்) உடனடியாக நிகழப்போவது - தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு இருக்கற NWFP, பலூச்சிஸ்தான் எல்லாம் பாக்.தாலீபான்கள் கையில் விழுந்து விடும். அரசின் வலதுகள் மூலம் அவர்களுக்கு அணு ஆயுதங்களின் access கிடைத்து விடும்.

இல்லை small scale war என்று ஆரம்பித்தால் கூட அது Full scale war ஆக escalate ஆகிவிடும் - அவர்களிடம் இருக்கும் அணுகுண்டை நம் தலைமீது வீசும் டெக்னாலஜி அவர்களிடம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

மிக மிக சிக்கலான நிலை. எனவே தான் அமெரிக்கா கூட மெதுவாக ஸ்டெப் எடுத்து வைக்கிறான். இங்கே உங்களைப் போன்ற மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி கொண்டவர்களோ ஏதோ பாக்கிஸ்தான் என்பது சோப்பளாங்கி நாடு போலவும் - போக வேண்டியது - அடிக்க வேண்டியது - கெலிக்க வேண்டியது - அவ்வளவு தானே? அப்புறம் ஏன் இந்திய அரசியல்வாதிகள் தயங்குகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்..

நம்ம நிலப்பரப்பு vs நமது ஆயுதங்கள் / பாக் நிலப்பரப்பு vs அவனது ஆயுதங்கள்னு போட்டுப் பார்த்தீங்கன்னா அவனோட ratio அதிகம். முழு அளவிலான போரில் நாம் ஜெயித்தாலும் சேதம் நமக்கு அதிகமா இருக்கும். அவன் பாட்டுக்கு லூசுத்தனமா போற போக்குல டெல்லி மேலேயோ இல்ல நம்ம சென்னை மேலேயோ ஒரு அணு குண்ட தூக்கிப் போட்டுட்டான்னா?

இது ஒரு லாங் processஆ வச்சி.. கொஞ்சம் கொஞ்சமா அவனை தனிமைப் படுத்தி, அவனுக்கு கிடைக்கற பொருளாதார உதவிகளை நிறுத்தி, பொருளாதார ரீதியா அவனை பிச்சக்காரனாக்கி.. அவனோட அணு ஆயுதங்கள பிரயோகம் செய்ய உதவும் carriersஐ அவன் பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு வந்து.. அப்புறம் கடசியா அடிச்சா தான் சரியா இருக்கும்.

தக்ளியூண்டு ஈராக்கை அடிக்கறதுக்கு முன்னெ அமெரிக்கா என்ன செய்தாங்க - எத்தனை வருசம் பொருமையா அவன de-stabilize செய்தாங்கன்னு யோசிங்க. அப்படி செஞ்சும் இப்ப அமெரிக்காவால முழுசா ஜெயிக்க முடியலை... நாம பாட்டுக்கு ரேம்போ படம் பார்த்த எபக்ட்ல என்ன வேணா பேசலாம் - மக்களோடு உணர்ச்சிய தூண்டி விடலாம்.. ஆனா நிதர்சனம்னு ஒன்னு இருக்கில்லையா?

யோசிங்க பாஸ்..

நம்ம லெவல்ல நாமே இவ்வளவு யோசிக்கிறோமே... அரசாங்கத்த நடத்தறவன் எவ்வளவு யோசிக்கனும்? எடுத்தோம் கவிழ்த்தோம்னு செயல்பட முடியுமா?

உங்களோட கடந்த சில பதிவுகளோடு தொனி இப்படித்தான் இருக்கு.

ஏதோ சொல்லனும்னு தோனிச்சி.. உங்க நன்பர் கி.அ.அ.அ கிட்டயும் போட்டு வையுங்க..

இல்ல.. ரொம்பத்தான் அரிச்சுதுன்னா வாங்க ஆளுக்கு ஒரு திருப்பாச்சி அருவா தாரேன்.. தூக்கிட்டு கெளம்புங்க பார்டருக்கு.

said...

ஒரு வேளை அந்த குண்டு தமிழகத்தின் மேல் விழுந்திருந்தால், தமிழர்கள் எல்லை தாண்டி வான் வழியே பாகிஸ்தானை பார்ப்பதால் இது நடக்கிறது, இது வருத்தமளிக்கிறது என்று சொல்லி இருப்பார்கள்.

said...

'குடும்ப ஆரோக்கியத்தை ஈஸியா எடுத்துக்கலாமா? அதனால் தான் நான் அதில் முழுகவனம் செலுத்துகிறேன்' என்றவாறு கருணாநிதி தன் பணியில் மூழ்கியிருப்பார். ஜெயலலிதா 'கருணாநிதியின் மைனாரிட்டி அரசு தான் இந்த நிலைமைக்கு காரணம். அதனால், அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். திமுக ஆட்சியை விட்டு விலகுவது அதை விட உசிதம்!' என்று தனது 788-வது கோப அறிக்கையை விடுவார்!
Suuuuuuper.........இதுக்குதான் அப்பேவா விஜயகாந்த் பாகிஸ்தான் அனுபங்க சொன்ன யாராவது கேக்ரேகிங்க்ள

said...

///ஏதோ சொல்லனும்னு தோனிச்சி.. உங்க நன்பர் கி.அ.அ.அ கிட்டயும் போட்டு வையுங்க..

இல்ல.. ரொம்பத்தான் அரிச்சுதுன்னா வாங்க ஆளுக்கு ஒரு திருப்பாச்சி அருவா தாரேன்.. தூக்கிட்டு கெளம்புங்க பார்டருக்கு.///

:)))

அரிப்புக்கு சொரிஞ்சுக்க அருவாளா?

கி அ அ அனானி

enRenRum-anbudan.BALA said...

கொத்ஸ்,
என் மேல உங்களுக்கு ஏன் இந்த கொல வெறி, நான் பாவங்க, விட்ருங்க ப்ளீஸ் :)

எட்வின்,
நம்ம மருத்துவர் ஐயாவுக்கு 'முழு பேச்சு சுதந்திரம்' அளிக்கப்பட்டுள்ளது ;-)

enRenRum-anbudan.BALA said...

பனித்துளி,
கருத்துக்கு நன்றி. நையாண்டியா எழுதின பதிவுங்க, இவ்வளவு கோபம் வேண்டாம் :)

பெனாத்தல்ஸ்,
உங்க 2 பாயிண்டும் கலக்கல், ஆனா ஞாநி மேல ஏன் இந்த ஆத்திரம் உங்களுக்கு ????? ;-)

enRenRum-anbudan.BALA said...

அனானி,
நீண்ட விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி. சில மறுப்புகள்:

//படையெடுத்துப் போய் போட்டு சாத்தி விடலாமா?

முடியாதுங்க.. பின் லேடன் அங்கே தான் இருக்கான்னு தெரிஞ்சும் ஆனானப்பட்ட அமெரிக்காவே பொத்திட்டு தான் இருக்கான்.
//
நான் (full scale அளவில்) படையெடுக்க எங்கே சொன்னேன் ? மேலும், அமெரிக்கா, அப்படியொன்றும் "மூடிக்" கொண்டிருக்கவில்லை. பாக் உள்ளே சென்று அவ்வப்பொழுது தலிபான்களை வேட்டையாடித் தான் கொண்டுள்ளது. அதை பெரிதுபடுத்தினால் பாகிஸ்தானுக்கு அசிங்கம் என்பதால், பாக் கம்மென்று இருக்கிறது !

//இல்லை small scale war என்று ஆரம்பித்தால் கூட அது Full scale war ஆக escalate ஆகிவிடும் - அவர்களிடம் இருக்கும் அணுகுண்டை நம் தலைமீது வீசும் டெக்னாலஜி அவர்களிடம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
//
நல்ல திட்டமிடலுடன் PoK ல் உள்ள தீவிரவாத கேம்ப்களை அழிக்க சில covert incursions, முழு அளவு யுத்தமாக ஆக வாய்ப்பில்லை என்பது என் கணிப்பு!! கார்கில் தான் எடுத்துக்காட்டு. அதனால், அணுகுண்டு பூச்சாண்டி காட்டாதீர்கள். எனக்கும் அதன் அபாயம் நன்றாகவேத் தெரியும் அய்யா..

//இங்கே உங்களைப் போன்ற மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி கொண்டவர்களோ ஏதோ பாக்கிஸ்தான் என்பது சோப்பளாங்கி நாடு போலவும்
//
OK, நான் மிடில் கிளாஸ் மெண்டாலிட்டி, நீங்கள் அறிவுஜீவி, முற்போக்காளர், போதுமா ? :)

//அவனுக்கு கிடைக்கற பொருளாதார உதவிகளை நிறுத்தி, பொருளாதார ரீதியா அவனை பிச்சக்காரனாக்கி..
//
அதெல்லாம் அவ்வளவு எளிதில்லை, அமெரிக்காவுக்கு பாக் தேவை, இந்தியாவுடன் நெருக்கம் இருந்தாலும் என்பது தான் யதார்த்தம். மேலும், சீனக் குள்ளர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் !!!

//நம்ம லெவல்ல நாமே இவ்வளவு யோசிக்கிறோமே... அரசாங்கத்த நடத்தறவன் எவ்வளவு யோசிக்கனும்?
//
தீவிரவாத ஒழிப்பு விஷயத்தில், இவங்க எல்லாருமே சோப்ளாங்கிகள் என்பதை பல வருடங்களாக பார்க்கிறோம். இதுவரைக்கும், இவங்க யோசிச்சு ஒண்ணும் கிழிக்கல, உடனே போருக்குப் போகச் சொல்லலே, சரியா ???

//உங்களோட கடந்த சில பதிவுகளோடு தொனி இப்படித்தான் இருக்கு.

ஏதோ சொல்லனும்னு தோனிச்சி.. உங்க நன்பர் கி.அ.அ.அ கிட்டயும் போட்டு வையுங்க..
//
"வல்லரசு என்றொரு கனவு - பகுதி 2" பதிவின் இறுதியில் கூட, கி.அ.அ.அ, பாகிஸ்தானுடன் கொஞ்ச காலம் உறவை முறித்துக் கொள்ளலாம் என்று சொன்னதாக ஞாபகம். மேலும் விளக்கம் அவரே வந்து கொடுப்பார்...

நன்றி.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

அனானி2,
வருகைக்கு நன்றி.

பாலாஜி,
கேப்டனை PoK க்கு மெஷின் கன்னுடன் அனுப்பினால், அங்குள்ள தீவிரவாதிகளை சுட்டுப் பொசுக்கி விட்டு ஒரு சிராய்ப்பு இல்லாமல் திரும்பி வந்து விடுவார். கூடவே அர்ஜுன் சென்றால், இன்னும் நல்லது ;-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails